40 இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் நிலையங்கள் மற்றும் இணைய வழி குற்றத் தடுப்பு ஆய்வகங்கள்
October 20 , 2019 2087 days 812 0
அதிகரித்து வரும் குற்றங்களைக் கையாளுவதற்காக 40 இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் நிலையங்களையும் இணைய வழிக் குற்றத் தடுப்பு ஆய்வகங்களையும் விரைவில் தமிழ்நாடு பெற இருக்கின்றது.
இணைய வழிக் குற்ற வழக்குகளைக் கையாள்வதைத் தவிர, இந்தப் புதிய உள்கட்டமைப்பானது வழக்கமான வழக்குகளைத் தீர்ப்பதற்குத் தேவையான டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிக்க காவல் துறைக்கு உதவ இருக்கின்றது.
இந்தப் பிரத்தியேக இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் நிலையங்கள் மற்றும் ஆய்வகங்கள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
கைபேசிகள், சிம் கார்டுகள், மடிக் கணினிகள் மற்றும் வன்தட்டுகள் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்ட தரவுகளையும் சேர்த்துத் தரவுகளை மீட்டெடுப்பதற்கான கருவிகள்.
கணினி அமைப்புகளில் ஊடுருவுதலுக்கான மென்பொருள் மற்றும் கணினி அமைப்புகளைக் கண்காணிப்பதற்கான மென்பொருள்.
இந்த வகையான காவல் நிலையங்கள் மற்றும் ஆய்வகங்களை அமைக்க தமிழ்நாடு அரசு 28.97 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.