TNPSC Thervupettagam

40வது சியாச்சின் தினம் - ஏப்ரல் 13

April 18 , 2024 13 days 96 0
  • உலகின் மிக உயரமான பகுதிகளில் அமைந்த போர்க்களத்தில் பணியாற்றும் இந்திய இராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் சியாச்சின் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் 'மேக்தூத் நடவடிக்கையின்' ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
  • இது 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இந்திய இராணுவத்தினால் தொடங்கப் பட்டது.
  • இது இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சியாச்சின் பனிப்பாறையைப் பாதுகாப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டது.
  • சியாச்சின் பனிப்பாறையானது, கடல் மட்டத்திலிருந்து சராசரியாக சுமார் 17,770 அடி உயரத்தில் காரகோரம் மலைத் தொடரில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்