இந்த நாள் வங்காளதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற முதல் SAARC உச்சி மாநாட்டில் SAARC சாசனம் (1985) ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டு நிகழ்வு ஆனது தெற்காசியாவில் பருவநிலைத் தகவமைப்பு சார்ந்த வேளாண்மையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
"ஒரு சுகாதாரம் என்ற சூழலில் தெற்காசியாவில் பருவநிலைக்கு உகந்த கால்நடை உணவு முறைக்கான பிராந்திய ஒத்துழைப்பு" என்பதில் இதன் முக்கிய உரை கவனம் செலுத்தியது.
SAARC என்பது ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிராந்தியக் கூட்டமைப்பாகும்.
SAARC அமைப்பின் செயலகம் நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.