41வது ஆசியத் தடகள சைக்கிள் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி
June 27 , 2022 1113 days 573 0
இந்நிகழ்ச்சியானது புது டெல்லியில் நடைபெற்றது.
இது ஒரு UCI (உலக சைக்கிள் ஓட்டப் போட்டியின் ஆளுகை குழு) முதல்நிலைப் போட்டி ஆகும்.
இந்தப் போட்டியானது தனிநபர்களை தரவரிசைப்படுத்தவும், சைக்கிள் ஓட்டும் வீரர்களை 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறச் செய்யவும் உதவும்.
இப்போட்டியில் ஜப்பான் முதலிடத்தையும், தென் கொரியா இரண்டாம் இடத்தையும் பெற்றன.
இந்திய சைக்கிள் ஓட்டும் வீரர்கள் அணியானது 23 பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
இதில் இரண்டு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இந்தச் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த பங்கேற்பு இதுவே ஆகும்.
ஆண்களுக்கான ஸ்பிரிண்ட் போட்டியில் இந்தியாவின் ரொனால்டோ சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த ஆசிய அளவிலானப் போட்டியில் ஒரு தனிநபர் வென்ற இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.