47வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாடானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 28 மற்றும் நவம்பர் 29 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காவல்துறையின் தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டின் தலைமை விருந்தினராக முன்னாள் காவல்துறை அதிகாரியும் புதுச்சேரியின் தற்போதையத் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி கலந்து கொண்டார்.
இந்த மாநாடானது காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (Bureau of Police Research and Development - BPR&D) ஏற்பாடு செய்யப்பட்டது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடாந்திர மாநாட்டை உத்தரப் பிரதேச மாநிலம் நடத்துகின்றது.
இந்த மாநாடானது காவல்துறையில் பரவியிருக்கும் சவால்கள் மற்றும் அதனோடு நெருங்கிய தொடர்புடைய தற்போதைய சூழ்நிலைக்குத் தேவையான 5 தலைப்புகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.