TNPSC Thervupettagam

4வது இந்திய சர்வதேச அறிவியல் விழா-IISF (India International Science Festival)

October 3 , 2018 2439 days 801 0
  • லக்னோவில் இந்திய அறிவியல் சம்மேளனத்தின் 4-வது பதிப்பு குடியரசுத் தவைரால் அக்டோபர் 6, 2018 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
  • இவ்விழாவின் கருத்துரு: அறிவியல் & தொழில்நுட்பம், கூட்டுறவு கட்டமைப்பு, சமூகத்தை பாதித்தல் (Science & Technology- Building Partnerships, Impacting Societies).
  • இவ்விழாவின் குவிய கருத்துரு: மாற்றத்திற்கான விஞ்ஞானம் (Science for transformation) ஆகும்.
  • இவ்விழாவை விஞ்ஞான பாரதியுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகங்கள் ஏற்பாடு செய்ய உள்ளன.
  • IISF 2018-ல் VIII முதல் X வகுப்பு வரையிலான 500 மாணவர்களால் ‘DNA-வை தனிமைப்படுத்தும்’ (isolate DNA) ஒரு உலக சாதனை முயற்சி செய்யப்படவுள்ளது.
  • அறிவியலை வளர்ப்பதற்காக ‘ஜெய் விஞ்ஞான்’ என்ற முழக்கத்தை உருவாக்கிய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இவ்விழாவானது அர்ப்பணிக்கப்படுகிறது.
  • 3வது IISF ஆனது தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள IIT சென்னை மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தில் அக்டோபர் 2017-ல் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்