TNPSC Thervupettagam

4வது உலகளாவிய மாபெரும் பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு

April 22 , 2024 25 days 163 0
  • அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (NOAA) முகமையின் பவளப்பாறை கண்காணிப்பு (CRW) அமைப்பு மற்றும் சர்வதேச பவளப் பாறை முன்னெடுப்பு (ICRI) அமைப்பு ஆகியவை இணைந்து 2023-2024 ஆம் ஆண்டில் நான்காவது உலகளாவிய மாபெரும் பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
  • கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த இதுபோன்ற இரண்டாவது நிகழ்வான இது 2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உலகப் பெருங்கடல்களில் முன்னப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவான காலக் கட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
  • இதற்கு முன்னதான பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வானது 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் நீடித்தது.
  • 2023 ஆம் ஆண்டின் இறுதியில், பெருங்கடலின் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் ஆண்டின் ஒரு கட்டத்தில் வெப்ப அலை சூழ்நிலைகளை எதிர்கொண்டன.
  • மிக சமீபத்தியப் பருவநிலை மாதிரிகள் ஆனது 2040-2050 ஆம் ஆண்டுகளில் எங்காவது ஒரு பகுதியில் உள்ள பெரும்பாலானப் பாறைகளில் நிறமாற்ற நிகழ்வுகள் வருடாந்திர வீதத்தில் நிகழக் கூடிய நிகழ்வாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்