இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றத்தால் (Indian Council for Cultural Relations - ICCR) ஏற்பாடு செய்யப்பட்ட 5வது சர்வதேச ராமாயணத் திருவிழாவானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்திருவிழாவானது சர்வதேச ராமாயணத் திருவிழாவின் 5வது பதிப்பாகும்.
இந்தத் திருவிழாவில் 17 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று ராமாயணத்தின் பதிப்புகளை வழங்கியுள்ளனர்.
இதுபற்றி
ICCR ஆனது 1950 இல் இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராகப் பதவி வகித்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது.
இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் மற்றும் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு & கலாச்சார உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் ICCR ஆனது நிறுவப்பட்டது.