January 15 , 2022
1268 days
544
- 1971 ஆம் ஆண்டு டெல்லி சீக்கிய குருத்வாரா சட்டத்திற்கான ஒரு திருத்த மசோதாவை டெல்லி சட்டசபை நிறைவேற்றியது.
- பஞ்சாபின் பதிண்டா பகுதியில் உள்ள "தக்த் தம்தாமா சாஹிப்பை" சீக்கியர்களின் ஐந்தாவது தக்த் ஆக இந்த மசோதா அங்கீகரிக்கிறது.
- தக்த் (சிம்மாசனம்) என்பது சீக்கியர்களுக்கான தற்காலிக ஒரு அதிகார பீடமாகும்.
- தற்போது, ஐந்து சீக்கிய தக்த்கள் உள்ளன.
- அவற்றுள் மூன்று பஞ்சாபிலும், ஒன்று மகாராஷ்டிராவிலும், ஒன்று பீகாரிலும் உள்ளன.
- அமிர்தசரஸில் அமைந்துள்ள அகல் தக்த் என்பது தக்த்களில் மிகவும் பழமையானது ஆகும்.
- இது 1606 ஆம் ஆண்டில், ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களால் நிறுவப் பட்டது.

Post Views:
544