5வது பிரிக்ஸ் கலாச்சாரத் துறை அமைச்சர்களின் சந்திப்பு
September 9 , 2020 1804 days 734 0
5வது பிரிக்ஸ் கலாச்சாரத் துறை அமைச்சர்களின் சந்திப்பானது ரஷ்யாவின் தலைமையில் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் பங்கு பெற்றனர்.
புது தில்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக் கூடமானது 2021 ஆம் ஆண்டில் கலை அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக் கூடங்களின் பிரிக்ஸ் கூட்டிணைவு என்பதின் கீழ் “பிராந்தியங்களுக்கிடையிலான பிணைப்பு & கலாச்சாரக் கூட்டு விளைவுகளைக் கற்பனை செய்தல்” என்ற தலைப்பு கொண்ட ஒரு பிரிக்ஸ் கூட்டு கண்காட்சியை நடத்தவுள்ளது.