5 ஆண்டு காலச் செயல்திட்டம் – 300 மில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு ஆற்றல் மூலங்கள்
January 30 , 2022 1295 days 604 0
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது மின்னணுத் துறைக்கான இரண்டாவது 5 ஆண்டுகாலச் செயல்திட்டம் மற்றும் இரண்டாம் பாக குறிக்கோள் ஆவணத்தினை (Vision Document 2.0) வெளியிட்டுள்ளது.
“2026 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலையான மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள்” என்று தலைப்பிடப்பட்ட இந்தக் குறிக்கோள் ஆவணத்தினை இந்திய செல்லிடப்பேசி மற்றும் மின்னணுச் சங்கத்துடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.
“இந்தியாவின் மின்னணுப் பொருள் ஏற்றுமதி மற்றும் உலக மதிப்புத் தொடரில் அதன் பங்கு ஆகியவற்றை அதிகரித்தல்” என்று தலைப்பிடப்பட்ட இந்த ஆவணத்தின் முதல் பாகமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப் பட்டது.
2026 ஆம் ஆண்டிற்குள், தற்போதுள்ள 75 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு மின்னணுப் பொருள் உற்பத்தி மூலமாக இந்தியாவினை மாற்றுவதற்கு இது உதவும்.