தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) ஆதார் அடிப்படையிலான இணையதள உறுதிமொழி அமைப்பின் ஆதரவுடன், இந்தியாவில் 5 லட்சம் பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான உறுதிமொழியை ஏற்றுள்ளனர்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிருள்ள அல்லது இறந்த கொடையாளர்களிடமிருந்து சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம் மற்றும் குடல் போன்ற உறுப்புகளை மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.
மொத்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் அமெரிக்கா (US) மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலக அளவில் 3வது இடத்தில் உள்ளது என்றாலும் இறந்த கொடையாளர்களின் பற்றாக்குறையை இன்னும் எதிர் கொள்கிறது.
மூளைச் சாவு அடைவதை சட்டப்பூர்வமான மரணமாக அங்கீகரிக்கும் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம் (THOTA), 1994)-இன் (2011 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது) கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது.
இதன் நிறுவனக் கட்டமைப்பானது NOTTO (தேசிய நிலை), ROTTO (மண்டல உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) மற்றும் SOTTO (மாநில உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.