TNPSC Thervupettagam

5 லட்சம் உடல் உறுப்பு தானம் - நோட்டோ இணையதளம்

July 3 , 2026 5 days 88 0
  • தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) ஆதார் அடிப்படையிலான இணையதள உறுதிமொழி அமைப்பின் ஆதரவுடன், இந்தியாவில் 5 லட்சம் பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான உறுதிமொழியை ஏற்றுள்ளனர்.
  • உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிருள்ள அல்லது இறந்த கொடையாளர்களிடமிருந்து சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம் மற்றும் குடல் போன்ற உறுப்புகளை மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.
  • மொத்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் அமெரிக்கா (US) மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலக அளவில் 3வது இடத்தில் உள்ளது என்றாலும் இறந்த கொடையாளர்களின் பற்றாக்குறையை இன்னும் எதிர் கொள்கிறது.
  • மூளைச் சாவு அடைவதை சட்டப்பூர்வமான மரணமாக அங்கீகரிக்கும் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம் (THOTA), 1994)-இன் (2011 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது) கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது.
  • இதன் நிறுவனக் கட்டமைப்பானது NOTTO (தேசிய நிலை), ROTTO (மண்டல உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) மற்றும் SOTTO (மாநில உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்