TNPSC Thervupettagam

5 ஆழ்கடல் ஆய்வுகள்

May 21 , 2021 1550 days 1009 0
  • 5 ஆழ்கடல் ஆய்வுகளானது உலகின் ஆழமான ஐந்து பெருங்கடல்களின் ஆழ்கடல் பகுதியை  அளவிட்டுக் கூறியுள்ளன.
  • பசிபிக் பெருங்கடலிலுள்ள மரியானா அகழியிலுள்ள சேலஞ்சர் எனும் ஆழ்கடல் பகுதியே (10,924 மீ) உலகின் மிகவும் ஆழமான அகழியாக உள்ளது.
  • பசிபிக் பெருங்கடலிலுள்ள டோங்கா அகழியிலுள்ள ஹாரிசான் ஆழ்கடல் பகுதியானது (10,816) உலகின் இரண்டாவது ஆழமான அகழியாக திகழ்கிறது.
  • அமெரிக்காவினைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான விக்டர் லான்ஸ் வெஸ்கோவா என்பவர் 2018 ஆம் ஆண்டில் ஐந்து ஆழ்கடல் ஆய்வுப் பயணம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
  • புவியின் ஐந்து பெருங்கடலின் ஆழமான பகுதியை அடைந்த முதல் ஆய்வுப் பயணம் இதுவாகும்.

பெருங்கடல் மற்றும் அதன் ஆழமான பகுதிகள்

  • அட்லாண்டிக் பெருங்கடல் – பியூர்ட்டோ ரைகோ அகழியிலுள்ள பிரவுன்சன் ஆழ்கடல் (Brownson Deep) பகுதி (8,378 மீ).
  • தென் பெருங்கடல் – தெற்கு சான்ட்விச் அகழியிலுள்ள பேக்டோரியன் ஆழ்கடல் (Factorian Deep) பகுதி (7,432 மீ).
  • இந்தியப் பெருங்கடல் – ஜாவா அகழியிலுள்ள ‘Unnamed Deep’ என்ற பகுதி (7,187 மீ).
  • பசிபிக் பெருங்கடல் – மரியானா அகழியிலுள்ள (உலகின் மிக ஆழமான அகழி) சேலஞ்சர் ஆழ்கடல் பகுதி (Challenger Deep)  (10,92 4மீ).
  • ஆர்க்டிக் பெருங்கடல் - மொலோய் துளைப் பகுதி (5,551 மீ).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்