- அஞ்சல் துறையானது (மத்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சகம்) 5 நட்சத்திரக் கிராமங்கள் எனப்படும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டமானது குறிப்பாக உட்புறக் கிராமங்களில் அஞ்சல் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் முதன்மையான அஞ்சலகத் திட்டங்களின் மீது அனைவருக்குமான நாடு தழுவிய உள்ளடக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டமானது சோதனை அடிப்படையில் மகாராஷ்டிராவில் செயல்படுத்தப் படுகின்றது.
உள்ளடக்கியுள்ள திட்டங்கள்
- சேமிப்பு வங்கிக் கணக்கு, சிறு சேமிப்புக் கணக்கு, என்எஸ்சி/கேவிபி சான்றிதழ்கள்.
- சுகன்யா சம்ரிதி கணக்கு/பிபிஎப் கணக்குகள்.
- நிதியளிப்பு வழங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குடன் இணைக்கப் பட்ட இந்திய அஞ்சலகப் பணவழங்கீட்டு வங்கிக் கணக்குகள்.
- அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை / ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுக் கொள்கை மற்றும்
- பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா கணக்கு / பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்கு.
- ஒரு திட்டமானது 1 நட்சத்திரத் தரக் குறியீட்டிற்குச் சமமாகும்.
- எனவே, ஒரு கிராமமானது மேற்கண்ட பட்டியலிலிருந்து 4 திட்டங்களுக்காக தேசிய அளவிலான உள்ளடக்கத்தை அடைந்தால், அந்தக் கிராமமானது 4 நட்சத்திரக் தரக் குறியீடு மற்றும் அதற்கு மேற்பட்ட தரக் குறியீட்டைப் பெறும்.
