TNPSC Thervupettagam

5 நதிகள் இணைப்புத் திட்டம் அறிவிப்பு – மத்திய நிதிநிலை அறிக்கை

February 4 , 2022 1230 days 712 0
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது நிதிநிலை அறிக்கை உரையில் 5 நதிகள் இணைப்புத் திட்டம்  குறித்து முன்மொழிந்தார்.
  • இந்த இணைப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நதிகளாவன; கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா – பெண்ணாறு மற்றும் பெண்ணாறு - காவிரி,  தமன்கங்கா – பிஞ்சல் மற்றும் பார் – தபதி – நர்மதை ஆகியனவாகும்.
  • இந்தியாவின் 4வது மிகப்பெரிய நதியான கிருஷ்ணா நதி, மகாராஷ்டிராவிலுள்ள மகாபலீஸ்வரத்தில் உருவாகி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே பாய்கிறது.
  • மலையில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே பாய்கிறது.
  • இந்தியாவின் 3வது பெரிய நதியான கோதாவரி, நாசிக் என்னுமிடத்தில் உருவாகி மகாராஷ்டிரா, தெலுங்கான, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்கள் வழியே பாய்கிறது.
  • மும்பை நகரத்திற்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்காக தமன்கங்கா வடிகாலின் உரி நீரைத் திருப்பி விடுவதை தமன்கங்கா – பிஞ்சல் நதி இணைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தென்  குஜராத் பகுதியில் அமைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள 7 நீர்த் தேக்கங்களில் இருந்து வரும் உபரி நீரைத் திருப்பி விடுவதன் மூலம் கட்ச் மற்றும் சௌராஷ்டிரம் போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு வழங்குவதற்கு பார்-தபதி நர்மதை இணைப்புத் திட்டம் முன்மொழிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்