5-வது இருதரப்பு பேச்சுவார்த்தை – இந்தியா மற்றும் மலேசியா
January 14 , 2018 2732 days 908 0
இந்தியா மற்றும் மலேசியாவிற்கிடையே மரபுசார்ந்த மருத்துவ முறைகள் மீதான கூட்டுறவிற்கான 5-வது இருதரப்பு பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடத்தப்பட்டது.
2010-ல் இந்தியா மற்றும் மலேசியாவிற்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இந்த பேச்சுவார்த்தை ஆகும்.
இந்தியத் தரப்பில் ஆயுஷ் அமைச்சகத்தின் கூட்டுச் செயலாளர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்க மலேசிய சுகாதார அமைச்சகத்தின் துணை பொது இயக்குனர் அந்நாட்டிற்காக தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் :
மலேசியாவின் உடார் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துதல்.
மலேசிய நிபுணர்களுக்கு இந்தியாவில் பஞ்சகர்ம சிகிச்சை முறையில் நிபுணத்துவ பயிற்சி அளித்தல்.
மருத்துவ ஆய்வு சோதனைகளுக்காக ஆயுர்வேத மற்றும் மரபார்ந்த பொருட்களின் கூட்டிணை மீதான பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து மதிப்பிடல்.
நல்ல தரமான ஆய்வுக்கூட முறைகள் (Good Laboratory Practices - GLP) அடிப்படையில் ஆயுர்வேத பொருட்கள் மீதான பாதுகாப்பு மதிப்பாய்வு.