5-வது ட்ரோனியர் விமானப் படையான, இந்தியக் கடல் விமானப் படை (INAS - Indian Naval Air Squadron) பிரிவு 313 ஆனது கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்கால் இந்தியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந்த விமானப் படையானது சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து செயல்படவிருக்கின்றது.
இந்தியக் கடற்படையில் INAS 313 இணைக்கப்பட்டதன் மூலம், எந்தவொரு கடலோர மாநிலத்திலும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான கடற்படை விமானத் தளங்களை தமிழ்நாடு பெறவிருக்கின்றது.
இதர இரண்டு கடற்படை விமானத் தளங்கள் பின்வருமாறு:
அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி
ராமநாதபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் பருந்து
கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் & மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுத தளங்களுக்கு இலக்கு குறித்த தரவுகளை அளித்தல் ஆகிய பணிகளுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படுகின்றது.