இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் 35 ஆக இருந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமானது 32 ஆகக் குறைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 35 ஆக இருந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமானது 2020 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 32 ஆகக் குறைந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த மதிப்பீட்டில் மிகப் பெரியச் சரிவானது பதிவாகியுள்ளது.
இது கிராமப்புறங்களில் 36 ஆகவும், நகர்ப்புறங்களில் 21 ஆகவும் மாறுபடுகிறது.
கேரளாவில் (6) குறைந்த அளவு பச்சிளம் குழந்தை இறப்பு விகிதமும், மத்தியப் பிரதேசத்தில் (43) அதிகமான பச்சிளம் குழந்தை இறப்பு விகிதமும் பதிவாகியுள்ளது.
கேரளா (8), தமிழ்நாடு (13) மற்றும் பிற ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்கனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தொடர்பான நிலையான மேம்பாட்டு இலக்கினை (2030 ஆம் ஆண்டிற்குள் 25க்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ) எட்டியுள்ளன.
2020 ஆம் ஆண்டிற்கான தோராயமான தேசியப் பிறப்பு விகிதமானது (CBR) 19.5 ஆகும்.
2019 ஆம் ஆண்டில் பதிவான அளவை விட 0.2 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளதை இது குறிக்கிறது.