இந்திய சிவில் கணக்குகள் சேவையின் (ICAS) நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில், மார்ச் 1, 2026 அன்று இந்தியா 50வது சிவில் கணக்குகள் தினத்தைக் கொண்டாடியது.
மத்திய அரசின் தணிக்கை மற்றும் கணக்கியல் செயல்பாடுகளைப் பிரித்த பிறகு, நிதி அமைச்சகத்தின் (MoF) கீழ் 1976 இல் ICAS நிறுவப்பட்டது.
இந்தச் சீர்திருத்தம் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (கடமைகள், அதிகாரங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்தச் சட்டம், 1976 மற்றும் மத்திய கணக்குகளின் துறைமயமாக்கல் சட்டம், 1976 மூலம் செயல்படுத்தப்பட்டது.
பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS), கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டு (CGA) அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட இது அரசாங்கக் கொடுப்பனவுகள், ரசீதுகள் மற்றும் கணக்கியலுக்கான முக்கிய தகவல் தொழில்நுட்ப (IT) தளமாகும்.
2009 ஆம் ஆண்டில் மத்திய திட்டத் திட்டங்கள் கண்காணிப்பு அமைப்பாக (CPSMS) தொடங்கப் பட்ட PFMS -ஆனது பின்னர் நேரடிப் பலன் பரிமாற்றத்திற்காக (DBT) விரிவு படுத்தப் பட்டது.