50 லட்சம் மெட்ரிக் அளவிலான நீண்ட நாள் கழிவுகள் அகற்றம்
January 15 , 2026 11 days 76 0
சென்னை மாநகரக் கழகம் (GCC) ஆனது மொத்தம் 90 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான நீண்ட நாள் கழிவுகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை நுண்ணுயிர்க் கழிவுப் பிரிப்பு செயல்முறை மூலம் அகற்றியுள்ளது.
மீதமுள்ள கழிவுகளை 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
பெருங்குடி குப்பை மேடு பகுதியில், ப்ளூ பிளானட் என்விரான்மெண்டல்ஸ் சொலியூசன்ஸ் நிறுவனத்தின் நுண்ணுயிர்க் கழிவுப் பிரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
நுண்ணுயிர்க் கழிவுப் பிரிப்பு என்பது தாதுக்கள் மற்றும் பிற திடப்பொருட்களிலிருந்து பொதுவாக பாக்டீரியா, ஆர்க்கியா, பூஞ்சை அல்லது தாவரங்கள் போன்ற பல்வேறு நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உலோகங்களைப் பிரித்தெடுக்கும் நுட்பமாகும்.