இரண்டு இந்தியக் கடலடி (நீரில் மூழ்கி ஆய்வு செய்பவர்கள்) ஆய்வாளர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் 4,025 மற்றும் 5,002 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளனர்.
பிரான்சின் IFREMER உடன் இணைந்து, நாட்டில் எனும் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
5,000 மீட்டருக்கு மேல் மனிதர்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட ஆறுக்கும் குறைவான நாடுகளுடன் இந்தியாவும் தற்போது இணைகிறது.
2027 ஆம் ஆண்டிற்குள் 6,000 மீட்டர் ஆழத்தினை எட்டும் இலக்கை நோக்கிய இந்தியாவின் சமுத்திராயன் திட்டத்திற்கு இது ஒரு முன்னோடியாக அமைகிறது.
MATSYA-6000 நீர்மூழ்கிக் கப்பல் ஆனது, ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் மூன்று இந்திய நீர்மூழ்கி ஆய்வு வீரர்களை 6,000 மீட்டர் ஆழத்திற்குக் கொண்டு செல்லும்.