5,000 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட மரணச் சடங்குகள்
January 19 , 2023 1023 days 552 0
ஜூனா காதியா கிராமத்தில் (கட்ச், குஜராத்) மிகப்பெரியக் கல்லறைகளில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பீங்கான் பானைகள், மணிகளால் ஆன நகைகள், விலங்குகளின் எலும்புகள் போன்ற மதிப்பு மிக்க பொருட்களுடன் உள்ளிட்ட கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பண்டைய மனிதர்கள் தனிநபர் பயன்பாட்டுக் கலைப்பொருட்கள், புனிதத் தன்மையுடன் வணங்கப் பட்ட விலங்குகள் மற்றும் உணவு மற்றும் நீர் கொண்ட பானைகள் போன்ற பிற்காலப் பயன்பாடு கொண்ட பொருட்களுடன் இறந்தவர்களை புதைத்தனர் என்பதை இவை நிரூபிக்கின்றன.
இவை கி.மு. 3,200 முதல் கி.மு. 2,600 வரையிலான காலகட்டத்தினைச் சேர்ந்தவை.
இந்தத் தளமானது, மண்-மேடுகளால் ஆன புதைகுழிகளில் இருந்து கற்களால் ஆன கல்லறைகளுக்கு மாற்றமடைந்தப் பரிமாற்றத்தினைக் காட்டுகிறது.