50,000 ஆண்டுகளுக்குப் பிறகுத் தோன்றும் பச்சை நிற வால் நட்சத்திரம்
February 4 , 2023 923 days 433 0
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டப் பச்சை நிற வால் நட்சத்திரம் ஆனது 50,000 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியை நெருங்குகிறது.
இது முன்னதாக கற்காலத்தின் பொது இரவு வானில் கடைசியாகத் தென்பட்டது.
இது நியாண்டர்தால்களின் காலத்திலிருந்து பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருகிறது.
C/2022 E3 (ZTF) என்று பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம் ஆனது, பூமியிலிருந்து 26 மில்லியன் மைல்கள் (42 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் புவிக்கு அருகில் வர உள்ளது.
இந்த வால் நட்சத்திரமானது ஜனவரி மாதம் முதலே இரவு வானத்தைப் பிரகாசமாக்கி வருகிற நிலையில், இது செவ்வாய் மற்றும் பூமி ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் கடந்து செல்ல உள்ளது.
இது மணிக்கு 128,500 மைல்கள் என்ற (207,000 km/h) வேகத்தில் பயணிக்க உள்ளது.