TNPSC Thervupettagam

50வது PRAGATI கூட்டம்

January 6 , 2026 2 days 58 0
  • PRAGATI 50வது கூட்டம் ஆனது, புது டெல்லியில் நடைபெற்றது.
  • PRAGATI (செயல்பாடு சார் ஆளுகை மற்றும் சரியான நேரத்திலான அமலாக்கம்) என்பது 2015 ஆம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த தளம் ஆகும்.
  • இது உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பொது மக்களின் குறைகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கூட்டத்தின் போது, ​​ஐந்து மாநிலங்களில் ஐந்து முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள், 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்தச் செலவில், மதிப்பாய்வு செய்யப் பட்டன.
  • PRAGATI தளம் 85 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை விரைவுபடுத்தியுள்ளது என்பதோடு மேலும் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களில் சுமார் 94 சதவீதத்தினைத் தீர்த்துள்ளது.
  • போகி பீல் பாலம், ஜம்மு-உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் பாதை இணைப்பு, நவி மும்பை சர்வதேச விமான நிலையம், பிலாய் எஃகு ஆலை நவீனமயமாக்கல் மற்றும் கடர்வாரா மற்றும் LARA உயர் திறன் அனல் மின் நிலையங்கள் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க இது உதவியது.
  • இந்தத் தளம் கூட்டுறவு சார் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது என்பதோடு மேலும் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்களை ஒன்றிணைக்கிறது, என்ற நிலையில் இது தனித்தனிப் பிரிவுகள் அடிப்படையிலான செயல்பாட்டைத் தடுத்து பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது.
  • PRAGATI, PM SHRI (Prime Minister Schools for Rising India-எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதமர் பள்ளிகள்) பள்ளிகளைத் தேசிய அளவிலான திறன் மதிப்பீடுகளாக மாற்றச் செய்வதற்காக வேண்டி அவற்றைக் கண்காணித்து, சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்