TNPSC Thervupettagam

50வது சிவில் கணக்குகள் தினம் – மார்ச் 01

March 5 , 2026 7 days 50 0
  • இந்திய சிவில் கணக்குகள் சேவையின் (ICAS) நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில், மார்ச் 1, 2026 அன்று இந்தியா 50வது சிவில் கணக்குகள் தினத்தைக் கொண்டாடியது.
  • மத்திய அரசின் தணிக்கை மற்றும் கணக்கியல் செயல்பாடுகளைப் பிரித்த பிறகு, நிதி அமைச்சகத்தின் (MoF) கீழ் 1976 இல் ICAS நிறுவப்பட்டது.
  • இந்தச் சீர்திருத்தம் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (கடமைகள், அதிகாரங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்தச் சட்டம், 1976 மற்றும் மத்திய கணக்குகளின் துறைமயமாக்கல் சட்டம், 1976 மூலம் செயல்படுத்தப்பட்டது.
  • பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS), கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டு (CGA) அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட  இது அரசாங்கக் கொடுப்பனவுகள், ரசீதுகள் மற்றும் கணக்கியலுக்கான முக்கிய தகவல் தொழில்நுட்ப (IT) தளமாகும்.
  • 2009 ஆம் ஆண்டில் மத்திய திட்டத் திட்டங்கள் கண்காணிப்பு அமைப்பாக (CPSMS) தொடங்கப் பட்ட PFMS -ஆனது பின்னர் நேரடிப் பலன் பரிமாற்றத்திற்காக (DBT) விரிவு படுத்தப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்