54வது சர்வதேசத் திரைப்பட விழா - கோவா
December 10 , 2023
522 days
325
- 1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI), ஆண்டு தோறும் கோவாவில் நடத்தப்படும் ஆசியத் திரைப்பட விழாக்களில் ஒன்றாகும்.
- அந்தோணி சென் இயக்கிய பிரஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் கிரேக்க இணைத் தயாரிப்பு திரைப்படமான Drift மதிப்புமிக்க ICFT-UNESCO காந்தி பதக்கத்தைப் பெற்றுள்ளது.
- ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ், சினிமாவில் சிறந்து விளங்கியதற்காக மதிப்புமிக்க சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
- மாதுரி தீட்சித் நேனேக்கு 'பாரதிய சினிமாவில் ஆற்றியப் பங்களிப்புக்கான சிறப்பு அங்கீகாரம்' என்ற விருது வழங்கப்பட்டது.
- IFFI விழாவில் விருதை வென்ற முதல் கன்னடத் திரைப்படமாக ‘காந்தாரா’ வரலாறு படைத்தது.
- கன்னட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ரிஷப் ஷெட்டி, காந்தாரா திரைப்படத்திற்காக சிறப்பு நடுவண் விருதைப் பெற்றார்.
- Endless Borders திரைப்படம் ஆனது தங்க மயில் விருதை வென்றது.
- Endless Borders படத்தில் நடித்ததற்காக ஈரானிய நடிகர் பூரியா ரஹிமி சாம் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

Post Views:
325