55-வது மகாராஷ்டிர மாநில மராத்தி திரைப்பட விருதுகள்
April 20 , 2018 2640 days 1617 0
மகாராஷ்டிர மாநில அரசால் நிறுவப்பட்ட இந்த விருதுகளானது நடைபெற உள்ள 55வது மகாராஷ்டிர மாநில மராத்தி திரைப்பட திருவிழாவில் வழங்கப்பட உள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசானது பாலிவுட் நட்சத்திரம் தர்மேந்திராவிற்கு புகழ்மிக்க ராஜ்கபூர் வாழ்நாள் சாதனையாளர் விருதையும், திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிக்கு ராஜ் கபூர் சிறப்பு பங்களிப்பு விருதினையும் அறிவித்துள்ளது.
பாலிவுட் திரை நட்சத்திரமான தர்மேந்திரா அவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு நாட்டினுடைய மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு (V. Shantaram Lifetime Achievement award) மராத்தி நடிகரான விஜய் சவான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சாந்தாராம் சிறப்பு பங்களிப்பு விருதுக்கு (V. Shantaram Special Contribution award) மராத்தி நடிகர் மற்றும் இயக்குநரான ரினால் குல்கர்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.