56வது இந்தோ-திபெத்திய எல்லைக் காவற்படையின் நிறுவிய தினம்
October 25 , 2017 2824 days 996 0
மத்திய உள்துறை அமைச்சர் , பெரும் நொய்டாவின் சூரஜ்பூரில் ITBP யின் 39 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள லக்னவாலி முகாமில் நடைபெற்ற ITBP யின் 56 வது துவக்க நினைவு விழாவில் கலந்துகொண்டார்.
லடாக்கின் காரகோரம் கணவாயிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் ஜாசெப் லா வரையிலான 3488 கி.மீ நீளமுடைய இந்தோ-சீன சர்வதேச எல்லையை பாதுகாப்பதற்காக 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் படை (Indo-Tibetan Border Police - ITBP) தோற்றுவிக்கப்பட்டது.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-சீன போரின் விளைவாக மத்திய ரிசர்வ் போலீஸ் சட்டத்தின் கீழ் 1962ல் அக்டோபர் 24ஆம் தேதி ஐந்து ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாக ITBP தோற்றுவிக்கப்பட்டது.
1992ல் இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல் படைச்சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு முழு தன்னாட்சி அதிகாரம் ITBPக்கு வழங்கப்பட்டது.
இந்த காவல்படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.