57வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டி 2025 - ஐக்கிய அரபு அமீரகம்
July 22 , 2025 122 days 168 0
துபாயில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (IChO) போட்டியில் இந்திய மாணவர் அணியானது இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் இஸ்ரேல் போன்ற சில நாடுகளுடன் இணைந்து பங்கேற்கும் 90 நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு IChO போட்டியில் இந்தியா 26வது முறையாகப் பங்கேற்றுள்ளது.
தங்கப் பதக்கங்களை மகாராஷ்டிராவின் ஜல்காவோனைச் சேர்ந்த தேவேஷ் பங்கஜ் பையா மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த சந்தீப் குச்சி ஆகியோர் வென்றனர்.
வெள்ளிப் பதக்கங்களை ஒடிசாவின் புவனேஷ்வரைச் சேர்ந்த தேபடத்த பிரியதர்ஷி மற்றும் புது டெல்லியைச் சேர்ந்த உஜ்வால் கேசரி ஆகியோர் வென்றனர்.