இந்த உச்சி மாநாடானது இலங்கையில் கலப்பு முறையில் நடைபெற்றது.
2022 ஆம் ஆண்டு BIMSTEC உச்சி மாநாட்டில் BIMSTEC சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு கையெழுத்திடப் பட்டது.
இந்த சாசனம் ஆனது, BIMSTEC குழுவை ஒரு கொடி, ஒரு சின்னம் மற்றும் உறுப்பினர் நாடுகளால் கடைபிடிக்கப்பட வேண்டிய முறைப்படி பட்டியலிடப்பட்ட கொள்கைகள் கொண்ட ஓர் அமைப்பாக முறைப்படுத்துகிறது.
BIMSTEC தலைவர்கள் 3 வெவ்வேறு BIMSTEC ஒப்பந்தங்கள் கையெழுத்தான ஒரு நடைமுறையையும் மேற்பார்வையிட்டனர்.
மேலும், BIMSTEC செயலகத்திற்கு அதன் செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்தை அதிகரிப்பதற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய நாட்டினால் வழங்கப் படும்.
நாளந்தா சர்வதேசப் பல்கலைக்கழகம் வழங்கும் BIMSTEC உதவித் தொகை திட்டத்தின் நோக்கமும் விரிவுபடுத்தப் படுகிறது.
உறுதியானப் பிராந்தியத்தை நோக்கி, வளமானப் பொருளாதாரம், ஆரோக்கியமான மக்கள் (Towards a Resilient Region, Prosperous Economies, Healthy People) என்பது இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு ஆகும்.