Viva Tech என்பது ஐரோப்பாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் தொடக்க நிறுவன நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.
இது 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரீசில் நடத்தப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு விவாடெக் (Viva Tech) நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டார்.
பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றும் போது, திறமை, சந்தை, மூலதனம், சூழலமைப்பு மற்றும் பரந்த கலாச்சாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.