இது உலகளாவிய சுற்றுச்சூழல் நிர்வாகத்தை முன்னேற்றுவதற்காக வேண்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது.
இது கென்யாவின் நைரோபியில் நடத்தப் பட்டது.
இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைந்திடச் செய்வதற்காக இயற்கைக்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த 14 தீர்மானங்களுடன் முடிவடைந்தது.
2024 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஆணையுடன் அரசுகளுக்கு இடையேயான ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை நிறுவ சபை ஒப்புக் கொண்டது.
இதைத் தொடர்ந்து UNEP@50 என்ற நிகழ்வு நடைபெற்றது.
1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டின் ஒரு முன்முயற்சியாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டம் (UNEP - United Nations Environment Programme) நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு விழாவை உலக நாடுகள் கொண்டாடின.
நைரோபியில் இத்திட்டத்தின் தலைமையகத்தை நிறுவுவதற்கான ஒரு முடிவு 1972 ஆம் ஆண்டில் ஐ.நா.வால் எடுக்கப்பட்டது.
நைரோபியில் உள்ள இந்த ஐக்கிய நாடுகளின் அலுவலகமானது தெற்கு அரைக் கோளத்தில் உள்ள ஒரே UN தலைமையகமாக உள்ளது.
ஓசோன் அடுக்கைச் சேதப்படுத்தும் பொருட்களின் மீதான மாண்ட்ரியல் என்ற நெறி முறையை ஏற்க உதவும் வகையில் 1987 ஆம் ஆண்டில் உலகளாவியத் தீர்வை ஏற்றுக் கொள்வதற்கு UNEP பங்களித்தது.