மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக தேசிய நிறுவனத் தரக் கட்டமைப்பை (NIRF- National Institutional Ranking Framework) வெளியிட்டுள்ளது.
இதில் ஐஐடி-மதராஸ் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஐஐஎஸ்சி-பெங்களூரு தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்றாவது இடத்தை ஐஐடி-தில்லி கைப்பற்றியது.
ஐஐடி-மதராஸ் ஆனது சிறந்த பொறியியல் கல்லூரியாக உருவெடுத்துள்ளது.
பல்கலைக்கழகப் பிரிவில், ஐஐஎஸ்சி-பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதலாவது NIRF தரவரிசையானது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
NIRF ஆனது பொறியியல், பல்கலைக்கழகம், மேலாண்மை, கல்லூரி, மருத்துவம், மருந்தகம், சட்டம், பல்மருத்துவம் மற்றும் கட்டிடக்கலை ஆகிய 10 பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்துகின்றது.
முதன்முறையாக, இந்த ஆண்டின் பட்டியலில் பல் மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப் பட்டுள்ளன.