“Autocratisation goes viral’” என்ற தலைப்பு கொண்ட 5வது வருடாந்திர மக்களாட்சி அறிக்கையானது சுவீடனின் ‘Varieties of Democracy (V-Dem)’ எனும் ஒரு அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது முந்தைய பத்தாண்டுகளில் நிகழ்ந்த வளர்ச்சியின் பின்னணிக்கு எதிராக உலகின் மக்களாட்சியின் நிலை குறித்து விவரிக்கின்றது.
இந்தியாவின் நிலையானது “உலகின் மிகப்பெரிய மக்களாட்சி” என்ற நிலையிலிருந்து “தேர்ந்தெடுக்கப்பட்ட ஏகாதிபத்தியம்” என்ற நிலைக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளது.