நாக்பூர் நகரை பிலாஸ்பூர் நகருடன் இணைக்கும் 6வது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையினைப் பிரதமர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே டெல்லி-வாரணாசி, டெல்லி - ஸ்ரீ வைஷ்ணோ தேவி மாதா கத்ரா, காந்திநகர் - மும்பை, புதுடெல்லி - ஆம்ப் ஆண்டௌரா மற்றும் சென்னை - மைசூரு ஆகிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்திய இரயில்வே நிர்வாகமானது, டெல்லி-வைஷ்ணோ தேவி, கத்ரா வழித் தடத்தில் முழுவதும் சைவ உணவு வகைகள் வழங்கப்படும் வசதி கொண்ட முதல் வந்தே பாரத் இரயில் சேவையினைத் தொடங்கியது.