இந்திய திறன்கள் அறிக்கையின் 6-வது பதிப்பான 2019 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன் ஆந்திரப் பிரதேசமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புத் திறன்களுடன் அதிகப்படியாக வேலைவாய்ப்பு உள்ள மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்றாகும்.
பெண்களின் வேலைவாய்ப்புத் திறன் 46% மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்புத் திறன் 48% ஆகியவற்றுடன் மொத்த வேலைவாய்ப்புத் திறன் 47% ஆக உயர்ந்துள்ளது.
இந்த அறிக்கை கீழ்க்காண்பனவற்றின் கூட்டு முயற்சியாகும்.
உலகளாவிய திறன் மதிப்பீட்டு நிறுவனமான வீபாக்ஸ் (Wheebox)
முன்னணி மனித வள தொழில்நுட்ப நிறுவனமான PeopleStrong மற்றும்
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry)
மேலும் இது,
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme)
தொழில்நுட்ப கல்விக்கான அனைத்திந்திய குழுமம் ( All India Council for Technical Education)
இந்தியப் பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு (Association of Indian Universities) போன்ற புகழ்மிக்க பங்காளர்களால் ஆதரிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையானது உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் வெளியிடப்பட்டது.