சமீபத்தில் உயிரியல் பல்லுயிர்ப் பெருக்கத்தின் மீதான உடன்படிக்கையிடம் (CBD - Convention on Biological Diversity), இந்தியா தனது 6-வது தேசிய அறிக்கையை (NR6 – National Report 6) சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையானது புது தில்லியில் நடைபெற்ற மாநில பல்லுயிர்ப் பெருக்க வாரியங்களின் (State Biodiversity Boards - SBBs) 13-வது தேசிய சந்திப்பின் தொடக்க விழாவின் போது சமர்ப்பிக்கப்பட்டது.
ஆசியாவில் முதலாவது மற்றும் அதிகமான உயிர் – பன்முகத் தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா CBD தலைமையகத்திற்கு NR6-ஐ சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை CBD-ற்கு சமர்ப்பித்த உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
20 உலகளாவிய அயிச்சி பல்லுயிரியல் இலக்குகளுக்கு ஏற்ப உடன்படிக்கை செயல்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட 12 தேசிய பல்லுயிர்ப் பெருக்க இலக்குகளை அடைவதற்கு NR6 மேம்பட்ட தகவல்களை அளிக்கிறது (NBT - 12 National Biodiversity Targets).
சில சாதனைகள்
இந்தியாவில் 0.08% இனங்கள் மட்டுமே “அழிவு நிலையில் உள்ள இனங்களாக” வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு மடங்கு புலிகளானது இந்தியாவில் உள்ளது.
முன்பு இந்தியக் காண்டாமிருகம் அழிவின் விளிம்பில் இருந்தது. ஆனால் தற்பொழுது இவற்றின் எண்ணிக்கையானது 2400 ஆக உள்ளது.