6 கோடி அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகைப் பாதிப்பு பரிசோதனை
July 28 , 2025 2 days 30 0
தேசிய அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை திட்டத்தின் கீழ் மொத்தம் ஆறு கோடி நபர்களுக்கு அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இந்தத் தகவல் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் உத்தர காண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் இலக்குகளுடன் ஒப்பிடும் போது அதிக சதவீதப் பரிசோதனையை அடைந்தன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கண்டறியப் பட்ட நோய்ப் பரிசோதனைகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
தேசிய அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை ஒழிப்பு இயக்கம் ஆனது 2023 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த இயக்கம் ஆனது பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளில் 0 முதல் 40 வயது வரையிலான ஏழு கோடி நபர்களுக்கு அனைவருக்குமானப் பரிசோதனை வழங்கல் மூலம் 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை பாதிப்பினை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.