6 யுன்ஹாய் - 2 செயற்கைக் கோள்கள் மற்றும் ஒரு சோதனை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
December 30 , 2018 2573 days 894 0
சீனா தனது யுன்ஹாய் - 2 என்ற 6 வளிமண்டல சூழல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்களையும் ஹாங்யான் விண்மீன் கூட்டத்திற்கான ஒரு சோதனை தகவல்தொடர்பு செயற்கைக் கோளையும் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
இந்த 6 யுன்ஹாய் - 2 செயற்கைக் கோள்களானது வளிமண்டல சூழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களைத் தடுத்தல் மற்றும் குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்யும்.
சோதனை செயற்கைக் கோளானது குறைமட்டப் புவிப் பாதையில் உள்ள கைபேசிகளின் தகவல் தொடர்புகளுக்கான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படவிருக்கிறது (LEO - Low Earth Orbit).
சோதனை செயற்கைக் கோளானது சீன விண்வெளித் தொழில்நுட்ப அகாடமியின் கீழ் இயங்கும். சென்செனில் உள்ள டோங்பேங்க்ஹோங் விண்வெளி வளர்ச்சி நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.