ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) ஆனது சுமார் 650 மில்லியனுக்கும் அதிகமான தினசரி பரிவர்த்தனைகளுடன் உலகின் மிகச் சிறந்த நிகழ்நேரக் கட்டண முறையாக மாறியுள்ளது.
சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் விசா (Visa) செயல்பட்டாலும் 7 நாடுகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ள UPI ஆனது விசாவின் சுமார் 639 மில்லியன் தினசரிப் பரிவர்த்தனைகளை விஞ்சியது.
இங்கு இந்திய தேசியப் பண வழங்கீட்டுக் கழகம் (NPCI) உருவாக்கிய அலைபேசித் தளங்களுக்கான உடனடியாக வங்கிகளுக்கு இடையேயான பண வழங்கீட்டு முறை என்பதாக UPI 2016 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
UPI மாதந்தோறும் 18 பில்லியனுக்கும் அதிகமானப் பணப் பரிவர்த்தனைகளை செயல் படுத்துகிறது மற்றும் இந்தியாவின் மின்னணுவழி சில்லறைக் கட்டணங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.