68வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு (CPC) ஆனது பார்படோஸின் பிரிட்ஜ் டவுனில் தொடங்கியது.
இந்த நிகழ்வினை 1911 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கம் (CPA) ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாடு ஆனது சட்டமியற்றுக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதிலும் உலகளாவிய ஆளுகைச் சவால்களை எதிர்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், ஜனநாயக மதிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும் CPC ஒரு தளமாக செயல்படுகிறது.