68வது தேசிய வனவிலங்கு வாரம் - அக்டோபர் 02 முதல் 08 வரை
October 9 , 2022
1034 days
442
- 68வது தேசிய வனவிலங்கு வாரமானது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 02 முதல் 08 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என்பது விலங்குகளின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்.
- இந்திய வனவிலங்கு வாரியமானது 1952 ஆம் ஆண்டில் வனவிலங்கு வாரத்தை நிறுவியது.
- வனவிலங்குத் தினமானது முதன்முதலில் 1955 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- பின்னர் 1957 ஆம் ஆண்டில் இது வனவிலங்கு வாரம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Post Views:
442