கத்தார் பளு தூக்குதல் சர்வதேசக் கோப்பை - 2019ன் 6வது பதிப்பானது கத்தாரின் தோஹாவில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வானது சர்வதேசப் பளு தூக்குதல் கூட்டமைப்பின் (International Weightlifting Federation - IWF) கீழ் உள்ள கத்தார் பளு தூக்குதல் கூட்டமைப்பினால் (Qatar Weightlifting Federation - QWF) நடத்தப் பட்டது.
ஜெர்மி லால்ரின்னுங்கா என்பவர் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் அனைத்துப் பிரிவிலும் அவரது பெயரில் இருந்த 27 சாதனைகளை முறியடித்தார்.
இவர் 12 சர்வதேச சாதனைகள் (மூன்று இளையோர் உலகப் போட்டி, மூன்று இளையோர் ஆசிய, ஆறு காமன்வெல்த் சாதனைகள் உட்பட) மற்றும் 5 தேசிய இளையோர் சாதனைகளுடன் 5 இளையோர் தேசிய மற்றும் 5 மூத்த தேசிய சாதனைகளையும் முறியடித்துள்ளார்.