TNPSC Thervupettagam

6வது மிகப்பெரிய பொருளாதாரம் - இந்தியா

April 21 , 2026 2 days 72 0
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையில் இந்தியா உலகளவில் 6வது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ள பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்த உலகளாவிய தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $4.15 டிரில்லியன் ஆகும், இது ஜப்பான் (~$4.38 டிரில்லியன்) மற்றும் இங்கிலாந்து (~$4.27 டிரில்லியன்) ஆகிய நாடுகளுக்குப் பின்னால் உள்ளது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் திருத்தம் (அடிப்படை ஆண்டு மாற்றம்) மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் இந்த தரவரிசை குறைந்துள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹357 லட்சம் கோடியிலிருந்து ₹345 லட்சம் கோடியாக திருத்தப்பட்டுள்ளது.
  • இந்தியா 2027 ஆம் ஆண்டிற்குள் 4வது மிகப்பெரிய பொருளாதாரமாகவும், 2031 ஆம் ஆண்டிற்குள் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாகவும் மாறும் என IMF கணித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்