ஹரியானா அரசாங்கம் ஏழு சமூக அளவுருக்களின் அடிப்படையில் அதன் கிராம பஞ்சாயத்துகளைத் தரம் பிரித்து நட்சத்திரத் தகுதி வழங்குவதற்காக 7-ஸ்டார் கிராம பஞ்சாயத்து திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
அம்பாலா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து குருகிராம் மற்றும் கானல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
அனைத்து அளவுருக்களிலும் அதிக மதிப்புக் கொண்ட கிராம பஞ்சாயத்து இந்திரதனுஷ் கிராம பஞ்சாயத்தாக அங்கீகரிக்கப்படும்.
6 நட்சத்திரங்கள் வென்ற கிராமங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான கூடுதல் மேம்பாட்டுப் பணிகளும், 5 நட்சத்திரங்கள் வென்ற கிராமங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கூடுதல் மேம்பாட்டுப் பணிகளும் வழங்கப்படும்.
4 நட்சத்திரங்கள் வென்ற கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் வழங்கப்படும்.
கிராமங்களுக்கு வழங்கப்படும் நட்சத்திரங்களின் பிரிவுகள் :
இளஞ்சிவப்பு நிற நட்சத்திரம்
பாலின விகிதத்தினை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களைக் கொண்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும்.
பச்சை நிற நட்சத்திரம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வெள்ளை நிற நட்சத்திரம்
தூய்மை
காவி நிற நட்சத்திரம்
குற்றங்கள் இல்லாத கிராமங்களுக்கு வழங்கப்படும்
வானத்தின் வண்ண நட்சத்திரம்
பள்ளிக் கல்வியிலிருந்து விலகாத மாணவர்களைக் கொண்ட கிராமங்களுக்கு வழங்கப்படும்.
தங்க நிற நட்சத்திரம்
சிறந்த ஆட்சி முறை
வெள்ளி நிற நட்சத்திரம்
கிராம மேம்பாட்டின் பங்களிப்பிற்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு அளவுருக்களிலும் சாதிக்கும் கிராமங்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் மக்கள் தொகையில் சரிசமமான அல்லது அதிக பெண்களைக் கொண்ட கிராமங்களுக்குப் பரிசுத் தொகையுடன் ரூ.50,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.