7000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றம் - செர்பியா
May 6 , 2024 383 days 415 0
வடகிழக்கு செர்பியாவின் பனாட் பகுதியில் மாபெரும் அளவிலான வரலாற்றுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்த குடியேற்றப் பகுதியானது கண்டறியப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இதுவரை அறியப்பட்ட குடியேற்றத்தை புதிய கற்காலத்தின் பிற்பகுதியை விட மிகவும் பிந்தையக் காலத்தினை (சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய) சேர்ந்ததாக கூறுகின்றனர்.
வடகிழக்கு செர்பியாவின் பனாட் பகுதியில் டாமிஸ் நதிக்கு அருகில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது.
வின்கா கலாச்சாரம் என்பது இந்த காலக் கட்டத்தில் தென்கிழக்கு-மத்திய ஐரோப்பாவின் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய இனக் குழு ஆகும்.