71வது குடியரசு தின அணிவகுப்பு - 2020க்கான விருதுகள்
February 3 , 2020 2108 days 867 0
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று கொண்டாடப்பட்ட 71வது குடியரசு தின நிகழ்வின் போது நடத்தப்பட்ட சிறந்த காட்சிப்பட அணிவகுப்பிற்கான விருதுகளை வழங்கினார்.
இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 16 காட்சிப் படங்களும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 6 காட்சிப் படங்களும் என மொத்தம் 22 காட்சிப் படங்கள் இடம் பெற்றன.
அசாம் மாநிலமானது ‘தனித்துவமான கைவினைத் திறன் மற்றும் கலாச்சாரத்தின் நிலம்’ என்ற கருப்பொருளைக் கொண்ட காட்சிப் படத்தைக் காண்பித்தது. சாத்ரியா பாரம்பரியத்தை போர்டல் நிருத்யா வடிவத்தில் காண்பித்த அசாம் மாநில காட்சிப் படமானது சிறந்தக் காட்சிப்பட அணிவகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த அணிவகுப்பில் லிங்கராஜாவின் ருகுனா ரத யாத்திரையைச் சித்தரித்த ஒடிசா மாநிலமும் சர்வ தர்ம சம்பாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்திய உத்தரப் பிரதேச மாநிலமும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
அரசாங்கத்தின் புதிய முயற்சியான “ஜல் சக்தி திட்டமானது” சிறந்த அணிவகுப்பு காட்சிப் பட விருதினை வென்றது.
மத்திய பொதுப் பணித் துறையானது (Central Public Works Department - CPWD) “காஷ்மீர் சே கன்னியாகுமரி” என்ற கருப்பொருளுக்காக சிறப்புப் பரிசினை வென்றுள்ளது.