71வது தேசிய திரைப்பட விருதுகள் 2023
August 6 , 2025
10 days
37
- புது டெல்லியில் அறிவிக்கப்பட்ட 71வது தேசிய திரைப்பட விருதுகளில் 12th Fail திரைப் படமானது, சிறந்த திரைப்பட விருதை வென்றது.
- Flowering Man சிறந்த முழு நீளத் திரைப்படத்திற்கான விருதையும், God Vulture and Human சிறந்த ஆவணப்படத்திற்கான விருதையும் பெற்றன.
- ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் மற்றும் 12th Fail திரைப்படத்திற்காக விக்ராந்த் மாஸி ஆகியோருக்கு முன்னணி சிறந்த நடிகருக்கான விருது வழங்கப் பட்டது.
- Mrs Chatterjee Versus Norway திரைப்படத்தில் நடித்ததற்காக இராணி முகர்ஜி சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை வென்றார்.
- விஜயராகவன் மற்றும் முத்துப்பேட்டை சோமு பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றனர்.
- ஊர்வசி மற்றும் ஜான்கி போடிவாலா ஆகியோர் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றனர்.
- இயங்குபடம், மெருகுக் காட்சிகள், விளையாட்டு மற்றும் கேலிச் சித்திரம் (AVGC) பிரிவில் ஹனுமான் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- Giddh The Scavenger சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றது.
- தமிழ் திரைப்படமான பார்க்கிங் சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த தமிழ் திரைப்படம் பிரிவு ஆகிய மூன்று விருதுகளை வென்றது.
- G.V. பிரகாஷ் குமார் சிறந்த இசை இயக்குனர் (பாடல்கள்) பிரிவில் விருதினை வென்று உள்ளார்.
- 2020 ஆம் ஆண்டில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக அவர் ஏற்கனவே தேசிய விருதை வென்றுள்ளார்.

Post Views:
37