TNPSC Thervupettagam

72வது தேசிய திரைப்பட விருதுகள் 2026

July 21 , 2026 3 days 354 0
  • 2024 ஆம் ஆண்டில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களை அங்கீகரித்து 72வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்தது.
  • 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் Article 370 சிறந்த திரைப்பட விருதையும், 'ராயன்' சிறந்த தமிழ்த் திரைப்பட விருதையும் வென்றுள்ளன.
  • சிறந்த நடிகருக்கான விருதை கார்த்திக் ஆரியன் (சந்து சாம்பியன்) மற்றும் மம்மூட்டி (பிரமயுகம்) ஆகியோர் கூட்டாகப் பெற்றனர்.
  • யாமி கவுதம் Article 370 படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
  • 'அமரன்' படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். அதே சமயம் 'கல்கி 2898 AD' திரைப்படம் சிறந்த முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
  • சிறந்த திரைப்படப் பிரிவில் 'புஷ்பா 2' சிறந்த திரைக்கதைக்கான விருதையும், 'அமரன்' சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும் பெற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்